மகேஸ் சிஸ்டத்தால் பெயரை கெடுத்து கொண்ட போயிங்
விமானங்கள் தயாரிக்கும் இரண்டு பெரிய நிறுவனங்கள் என்றால் அவை ஐரோப்பிய நாட்டைச் சார்ந்த ஏர்பஸ் ( Airbus ) நிறுவனமும், அமெரிக்க நாட்டை சார்ந்த போயிங் ( Boeing ) நிறுவனமும்தான். இவற்றில் முதலில் தொடங்கிய நிறுவனம், போயிங் நிறுவனம். 1916களில் இருந்து இந்நிறுவனம் இயங்கி வருகின்றது, ஏர்பஸ் நிறுவனம் 1970களில் இருந்தே விமானங்களை உருவாக்கி வருகிறது. கடந்த 2018 அக்டோபர் மாதம் 29 - ம் தேதி லயன் ஏர் எனும் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்ட போயிங் 737 Max 8 ரக பயணிகள் விமானம், ஜகார்த்தா மாநிலத்தில் புறப்பட்டு (Take off) பன்னிரண்டு வினாடிகளில் விபத்துக்கு உள்ளாகி ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் சுமார் 189 பயணிகள் உயிரிழந்தனர். தற்போது உலகத்தில் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் 25,000 க்கும் மேல் இயங்கி வருகின்றன அவை அனைத்தும் இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டும் தயாரித்தவைதான். போயிங், ஏர்பஸ் இரண்டு நிறுவனங்களிலும் பெரிய அளவில் வெற்றி பெற்ற விமானங்கள் என்று பார்த்தால் அவை போயிங் 737 வகையும், ஏர்பஸ்சில் A320 வகை விமானமும்தான். 737 வகை விமானம் சுமார் 10,000க்கும் மேலு...